×

குஜராத்திற்கு மட்டும் அள்ளிக்கொடுக்கும் மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? : திருச்சி சிவா எம்.பி காட்டம்

புதுடெல்லி: குஜராத்துக்கு மட்டும் அள்ளிக்கொடுக்கும் மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என்று வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு திருச்சி சிவா எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது.  இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி எம்.பி.சிவா, “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்; அதற்காக எங்களை சஸ்பெண்ட் செய்கின்றனர்: நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை இருக்கிறது.எங்கள் குரல் ஒடுக்கப்படுகிறது; நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம்:

டிச.13-ல் நடந்த நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது வெளியில் அறிக்கை தருவது மரபு அல்ல. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை அளிக்க எதிர்க்கட்சிகள் கோரியிருந்த நிலையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவையில் குழப்பம் உள்ளபோது 5 மசோதாக்களை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பேச காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன -கார்கேவுக்கு வாய்ப்பு தரவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 141 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. குஜராத்துக்கு உதவி செய்த ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் வழங்குவதில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஒலிப்பெருக்கி தருவதில்லை, அவர்களை கேமராவில் காட்டுவதும் இல்லை. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எந்தவித நிவாரணமும் இல்லை, பதிலும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் வைக்கிறார் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை திமுக அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய குழுவே பாராட்டியுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post குஜராத்திற்கு மட்டும் அள்ளிக்கொடுக்கும் மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? : திருச்சி சிவா எம்.பி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi government ,Tamil Nadu ,Gujarat ,Trichy Siva M. P ,New Delhi ,Trichy Siva M. P Katham ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...